“காங்கிரஸில் விசில் அடிப்பவர்களே அதிகம் உள்ளனர்”- தமிழிசை

 
தமிழிசை தமிழிசை

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலில் தனது கூட்டணியில் உள்ள பிரச்சினைகளைப் பார்க்கட்டும். அவர்கள் கூட்டணியில் சூரியனை கும்பிடுபவர்களை விட விசில் அடிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

தமிழிசை


சென்னை கே.கே.நகரில் பாஜகவின் சக்தி கேந்திரா கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர்,இன்றைய காலகட்டத்தில் எதிர்மறை அரசியல் அதிகமாக உள்ளது. அது நேர்மறை நாகரிகமான அரசியலாக வர வேண்டும்.வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார். சோழ மன்னர்கள் குறித்தான திருமாவளவன் பேச்சு வருத்தம் அளிக்கிறது என்றும் ராஜேந்திர சோழன் இந்தோனேசியா வரை நமது நாட்டை கொண்டு போனார். அதனால்தான் மும்பையில் புதிதாக கட்டப்பட்ட ஒரு துறைமுகத்தில் ராஜேந்திர சோழனின் படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசர், பேரரசனின் படம் மகாராஷ்டிராவில் நிறுவப்படுகிறது என்றால் அதுதான் பாரதிய ஜனதா கட்சியின் பரந்த மனப்பான்மை என்றார்.

Advertisement

ஆனால் திருமாவளவன் குறுகிய மனப்பான்மையோடு, அவர்கள் வடமொழிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள், யாகம் நடத்துவதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று மிகக் கொச்சையாக நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தமிழ் சக்கரவர்த்திகளை இழிவுபடுத்திப் பேசுகிறார். இவர்களுக்கு ராஜேந்திர சோழனோ, ராஜராஜ சோழனோ பெருமை தருவதில்லை. பிரதமர் மோடியும் பெருமை தருவது இல்லை.யார் தான் உங்களுக்கு பெருமை தருகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடிதான் தமிழுக்கு பெருமை சேர்க்கிறார். வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. இவர்கள் 'சமூக நீதி' பேசுகிறார்கள். இவர்களுக்கு அப்படிப் பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றார்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலில் தனது கூட்டணியில் உள்ள பிரச்சினைகளைப் பார்க்கட்டும். அவர்கள் கட்சியில் சூரியனை கும்பிடுபவர்களை விட விசில் அடிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். மக்கள் நெருக்கடியில் உள்ளார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருகிறது. 150 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்படவில்லை, மக்களுக்கான திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அது மக்களுக்கான திட்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்திக்கு பெயர் வைக்கவே காங்கிரசை பாஜக தான் தூண்ட வேண்டியுள்ளது.ஜி-ராம் (G-RAM) திட்டத்தின் மூலம் ஊழல் தடுக்கப்பட்டு, சம்பளப் பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுகிறது. இதை மக்கள் வரவேற்கிறார்கள் என்றார்.