தமிழக பாஜக தலைவர் பதவி... அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை- கடுப்பான தமிழிசை

 
 தமிழிசை

மீண்டும் தமிழக பாஜக தலைவராக வருகிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை பதிலளித்துள்ளார்.

விஜய்க்கு இது கடைசி படமா? தண்ணீரில்தான் எழுத வேண்டும்' - தமிழிசை


சென்னை மேற்கு மாம்பலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா புதுச்சேரி முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவரும் தமிழிசை சௌந்தர்ராஜன, “ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பத்தில் பாலம் திறந்து வைக்கப்படுவது பெருமை பல கோடி மக்களுக்கு பயன் தரும் வகையில் இந்த பாலம் இருக்கப் போகிறது. எலுமிச்சை உட்பட ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது, அதுவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு விவகாரத்தில்  முதலமைச்சர் நாடகம் செய்து கொண்டிருக்கிறார் கச்சத்தீவு யாரு ஆட்சிக்காலத்தில் தாரை வார்க்கப்பட்டது ? இந்தியா ஒரு அங்கமாக இருந்த கச்சத்தீவை தாரை வார்த்தது நீங்கள் தானே ? அதை மீட்டெடுப்பதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்தீர்கள்? நீட் தேர்வில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது, தீர்ப்புக்கு கூறிய பிறகு நீக்க முடியாது. தெரிந்த பின்பும் முதல் கையெழுத்து என்று சொல்லி ஏன் கையெழுத்த போடவில்லை ஏனென்றால் அது செய்ய முடியாது? நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் என்பது ஒரு நாடகம்.

பாஜக மாநில தலைவர் பற்றி எந்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. எங்களுக்கென்று ஒரு வழிமுறையை அகில இந்திய தலைமை கொடுத்திருக்கிறது. அதன்படி நாங்கள் செயல்படுவோம்” என்றார். தமிழக பாஜக தலைவராக மீண்டும் நீங்கள் வருவீர்களா? என எழுப்பிய கேள்விக்கு அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என பதிலளித்தார்.