2026-ல் தமிழகத்தில் தாமரையின் ஆட்சிதான்... அடித்து சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்

 
தமிழிசை

பாஜக சார்பில் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.  இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோரும்,  கூட்டணி கட்சி தலைவர்களான ரவி பச்சமுத்து , ஜான் பாண்டியன், ஏ.சி சண்முகம், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், பாமக பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

tamilisai

நிகழ்ச்சி மேடையில் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “என்னைப் பொருத்தம் மட்டில், நோன்பு திறக்க அனைத்து தலைவர்களும் இருக்கிறார்கள். 2026 ல் ஆட்சி அமைக்க அத்தனை பேரும் இருப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக அண்ணன் ஸ்டாலினுக்கு தூக்கம் போகும் என்று சொன்னார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் நாங்கள் பாஜகவோடும், தேசிய ஜனநாயக கூட்டணியோடும் இருக்கிறார்கள் என்று இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள். சென்ற ஆண்டு புதுச்சேரி ராஜ் நிவாஸில் முதல்முறையாக இந்த தொழுகை நடந்தது. ஆளுநராக இருந்தாலும், பாஜக தொண்டராக இருந்து ஆளுநரானாலும், தொழுகையை ராஜ் நிவாஸில் நடத்திய ஒரே ஆளுநர் என்ற பெருமையை நான் பெற்றேன்.

பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரைக்கு போக முடியாது என்று இருந்ததை, 5000 பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்வதற்கான ஏற்பாடு செய்தவர் பிரதமர் மோடி என்பது நாம் பதிவு செய்ய வேண்டும். பிரதமர் மோடி, வட மாநிலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் வாழும் அத்தனை தொகுதியிலும் நாம் வெற்றி பெறுகிறோம். ஆனால் தமிழகத்தில் இஸ்லாமியர் வாழும் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்றும், தே‌ஜ.கூ ஆட்சிக்கு வந்த பிறகு இந்த இப்தார் விருந்து இன்னும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் அதற்கு அண்ணாமலை தலைமை தாங்குவார் என்று கூறினார். நான் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று ஸ்டாலின் கூறினார். நான் ஒட்டுமொத்த குஜராத் மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பேன் என்று பிரதமர் மோடி அன்று கூறியிருந்தார். இதேபோல் வரிசையில் அமர்ந்து கையெழுத்து இட்டு 2026-ல் ஜார்ஜ் கோட்டைக்கு இந்த தலைவர்களின் சகோதரர்களோடு, கடுமையாக உழைப்போம். 2026 ல் தமிழகத்தில் தாமரை ஆட்சி கூட்டணி ஆட்சி அமையும்” என்றார்.