"அந்த சார் யாருன்னு கேட்டா கோவப்படுறாங்க"... தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- தமிழிசை

 
tamilisai

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tamilisai

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “இன்னும் பத்து நாட்களில் அத்தனை மாநிலங்களிலும் புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேற்று ஏதோ பெண்கள் தமிழகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் பெண்கள் முன்னேற்றத்திற்கு முழு பொறுப்ப இவர்கள் என்று தமிழக முதலமைச்சர்கள் பேசி வருகிறார். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. பாரதியார், காமராஜர் உள்ளிட்டவர்கள் செய்துள்ளார்கள். இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.


பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களை லட்சாதிபதியாக  மாற்றி வருகிறோம். மாநில தலைவர்களை தேர்ந்தெடுக்க பாஜக முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்வார்கள். அதேபோல் நான் அந்தமான் நிக்கோபார் மாநில தலைவர் தேர்ந்தெடுக்க சிறப்பு அதிகாரியாக செல்கிறேன். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் பற்றி விவரிக்கவும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாகவும் நட்டா அவர்களிடம் பேச உள்ளேன். சார் யார்? எனக் கேட்டால் அமைச்சர் உள்ளிட்டோருக்கு கோபம் வருகிறது. தமிழ் மொழி குறித்து பிரதமர் மோடி பேசியது நாடகம் எனக் கூறுவது கண்டனத்திற்குரியது. திருமாவளவன் மீண்டும் மீண்டும் அமித்ஷாவை கண்டித்து போராட்டம் நடத்துவதை விட அண்ணா பல்கலைக்க்ழக விவகாரம் தொடர்பாக போராட்டங்களை முன்னெடுக்கலாம். தமிழகத்தில் பெண் குழந்தைகள் கல்வி கற்கும் இடத்தில் பாதிக்கப்பட்டது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் வலிமையாக எந்த கருத்தும் சொல்லவில்லை என்பது கவலை அளிக்கிறது” என்றார்.