'Work From Home அரசியல்’... இதனை விஜய் முடிவு செய்யட்டும்- தமிழிசை செளந்தரராஜன்

 
தமிழிசை

தவெக தலைவர் விஜய் Invisible- ஆக இருந்தே ஒரு வருடம் ஆன நிலையில், Invisible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது என தெரியவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

tamilisai


செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநரும், தமிழக பாஜக நிர்வாகியுமான தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் சகோதர சகோதரிகளுக்கு வரியே இல்லை என்பது வரி வரியாக கொண்டாடக்கூடிய பட்ஜெட் ஆக தான் இது உள்ளது. எது கொடுத்தாலும் பற்றாக்குறையாக தான் இருக்கும், எதுக்கு கொடுத்தாலும் திருப்திகரமாக இருக்காது. மருத்துவத்துறை வேளாண்துறை நெசவாளர்கள் மாணவர்கள் மகளிர் இளைஞர்கள் முதியவர்கள் என எல்லாருக்குமான பட்ஜெட் இது. புதியதாக தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதனால் இளைஞர்கள் பெருமளவில் பயன்பட உள்ளனர். 

நேற்று தமிழகத்தைச் சேர்ந்தவர் எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வது சாதாரண விஷயம் அல்ல, அதிலும் அழகாக திருக்குறளை முன்னெடுத்து இருக்கிறார்கள். இதனால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும், ஆனால் தமிழுக்கு எந்த மகுடம் சூட்டினாலும் கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு பிடிக்காது. தமிழகத்தின் செங்கோலை எடுத்துச் சென்றாலும் மகிழ்ச்சி வராது, திருக்குறளும் சொன்னாலும் மகிழ்ச்சி வராது. தமிழர் ஒருவர் பட்ஜெட் தாக்கல் செய்தாலும் மகிழ்ச்சி வராது. பீகார் பட்ஜெட் என்று கனிமொழி கூறுகிறார்கள், பீகாரையை அழைத்து தேர்தல் வியூகம் அமைப்பாங்க அப்பொழுது அவர் பீகாரியா என்பது தெரியாது. வளர்ந்து வரும் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை சகோதரத்துடன் ஏற்றுக்கொள்கிறோம், உங்களை விட தமிழகத்தின் மீது பாஜக அக்கறை கொண்டுள்ளது.

தமிழிசை

நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிய நிலையில், தவெக தலைவர் விஜய் Invisible-ஆக இருந்தே ஒரு வருடம் ஆன நிலையில், Invisible-ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது என தெரியவில்லை? ஆனால் இறங்கி வந்து மக்களுக்காக பணியாற்றினால் மகிழ்ச்சி. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு, அது போல விஜய்க்கு தொலைதூர பார்வை மற்றும் தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும். Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும், களத்தில் இறங்க வேண்டாம் என நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களைப் போன்ற தலைவர்கள் மக்களோடு மக்களாக பழகுகின்ற தலைவர்களே, சரியான தலைவர்கள் என நாங்கள் நினைக்கிறோம. அதனை விஜய் முடிவு செய்யட்டும்” என்றார்.