மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம்

 
a

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. அதில் ''தமிழ் வாழ்க.. பாரதம் வாழ்க....'' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுதி கையெழுத்திட்டார். அவரை தொடர்ந்து ஹெச். ராஜா, கரு. நாகராஜ், தமிழிசை,  செளந்தரராஜன் உள்ளிட்டோர் கையொப்பமிட்டனர்.

Image


கையெழுத்து இயக்கம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஏழை, எளிய குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் கல்வி வாய்ப்பைத் தடுத்து, தனியார் பள்ளிகளில் மட்டும் பல மொழிகளைக் கற்க அனுமதிக்கும் திமுக அரசின் இரட்டை வேடத்தை வெட்ட வெளிச்சமாக்கவும், தமிழகம் முழுவதும், மும்மொழிக் கொள்கைக்கு பொதுமக்களிடையே இருக்கும் ஆதரவைத் திமுக அரசுக்கு உணர்த்தவும், தமிழக பாஜக சார்பாக, கையெழுத்து இயக்கம் இன்று சென்னையில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை தமிழக அரசுடன் போட்டிக்காக நாங்கள் செய்யவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.