நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் - ஹெச்.ராஜா

 
h.raja

நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய்  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

h.raja


இந்த நிலையில், நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: விஜய் நடித்த படங்கள் குறித்து விமர்சித்திருக்கிறேன். விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்தி வரவேற்கிறேன். அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விஜய் நினைக்கிறார். அதனால் அவரது அரசியல் பயணத்தை வரவேற்கிறேன். வந்த பின் அவர் கூறும் கருத்துக்களை பொறுத்து விமர்சனங்களை வைப்பேன் என கூறினார்.