2-ம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

 
Q
மக்களவை தேர்தல் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதன்படி, விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமாரும், திருவள்ளூர் (தனி) தொகுதியில் பொன் வி. பாலகணபதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை தொகுதியில் ஆர்.சி. பால் கனகராஜும், திருவண்ணாமலையில் அஸ்வத்தாமனும், நாமக்கல் தொகுதியில் கே.பி. ராமலிங்கமும் போட்டியிடுகின்றனர்.
அதேபோல், திருப்பூரில் ஏ.பி. முருகானந்தம், பொள்ளாச்சியில் வசந்தராஜன், கரூரில் செந்தில்நாதன், சிதம்பரத்தில் (தனி) கார்த்தியாயினி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தில் (தனி) ரமேஷ், தஞ்சாவூரில் முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன் யாதவ், மதுரையில் இராம சீனிவாசன், தென்காசியில் (தனி) ஜான் பாண்டியன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரியில் நமச்சிவாயம், விளவங்கோடு இடைத்தேர்தலில் வி.எஸ். நந்தினியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.