பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 
bjp

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் L.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பிரபல தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து இன்று மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 

Bjp list

விருதுநகர் - நடிகை ராதிகா சரத்குமார் 

புதுச்சேரி- நமச்சிவாயம்

திருவள்ளூர் - பொன் பாலகணபதி

சிவகங்கை - தேவநாதன் யாதவ்

வடசென்னை - ஆர்.சி.பால் கனகராஜ்

மதுரை - இராம சீனிவாசன்

நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்

ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.