ஊடக விவாதங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது பாஜக

 
narayanan thirupathi

பாஜக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர்கள் பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதியவர்களுக்கும் , இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

h.raja

இதுகுறித்து தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு.கரு.நாகராஜன்  அவர்கள் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்படுகிறார்.  மேலும் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான மாநில நிர்வாகிகள் பெயர் பட்டியல் இத்துடன் அறிவிக்கப்படுகிறது. ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான மாநில நிர்வாகிகள் பெயர் பட்டியல்.. அனைவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மொத்தம் 30 பேர் கொண்ட இந்த பட்டியலில், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமில், கே.பி.ராமலிங்கம். நரேந்திரன், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, சம்பத், இராம ஸ்ரீநிவாசன், பொன்.பாலகணபதி, முருகானந்தம், கார்த்தியாயினி, எஸ்.ஆர்.சேகர், வினோஜ் பி செல்வம், மீனாட்சி நித்ய சுந்தர், அஸ்வதாமன், எஸ்.ஜி.சூர்யா, நரசிம்மன், கார்வேந்தன், ஆதவன், ஸ்ரீகாந்த் கருனேஷ், எம்.என்.ராஜா, மகாலட்சுமி, அர்ஜூன மூர்த்தி, அமர் பிரசாத் ரெட்டி, ஷெல்வி தாமோதரன், குமரகுரு, மோகனபிரியா சரவணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.