“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு முதல்வரும், அவரது மகனுமே காரணம்”- ராஜ்நாத் சிங்
Apr 19, 2026, 12:52 IST1776583357299
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஆனந்தன் ஐயாசாமியை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு முதலமைச்சரும், அவரது மகனுமே காரணம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் மக்கள் உயிரிழந்தது திமுக அரசின் அலட்சியத்தாலேயே நடந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக காங்கிரஸ் தடுத்துவிட்டன. அந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும். NDA ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும். திமுகவினரின் ஊழல் பணம் மீட்டெடுக்கப்படும். மத்திய அரசு வழங்கும் நிதி மக்களுக்கு செல்லவில்லை. திமுகவினருக்கே சென்றுள்ளது. NDA கூட்டணி ஆட்சி அமைந்தவுடம் பெண்களுக்கு மாத ரூ.2,000 வழங்கப்படும்” என்றார்.

