“நீங்க வேலை பார்க்கிறது சரியில்ல..”- பாஜக தலைமையிடம் வசமாக சிக்கிய நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்திற்கு ஆதரவு இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளதால் அவரிடம் பாஜக தலைமை ரிப்போர்ட் கேட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கூட்டணிகள், வியூகங்கள், பிரச்சாரங்கள் - இவை அனைத்தும் வேகமாக முன்னேறி வருகின்றன. எந்த புதிய கட்சிகளும் சேராத நிலையிலும் வலுவான வெற்றிக் கூட்டணியாக திகழும் திமுக கூட்டணி, தேர்தல் முன்னெடுப்புகளை படுவேகமாக நகர்த்தி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கருதும் எதிர் தரப்பான அதிமுக, பாஜக உடன் மட்டும் கூட்டணியை திடீரென உறுதி செய்து வைத்திருக்கிறது. மற்றபடி கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்திற்கு ஆதரவு இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளதால் அவரிடம் பாஜக தலைமை ரிப்போர்ட் கேட்டுள்ளது. அதனால் நயினார் நாகேந்திரன் செயல்பாடுகள் டெல்லி தலைமைக்கு திருப்திகரமாக இல்லை எனவும், சில ஆலோசனைகள் வழங்க டெல்லி அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


