அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து பாஜக 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

 
annamalai

வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

Annamalai

தமிழ்நாட்டில்  புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகவும்,   இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும்தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   இந்தநிலையில் திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என தமிழக அரசுக்கு பாஜக அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும் வடமாநிலத்தவர் தொடர்பான பிரச்சனையை திசைதிருப்ப இப்போது என் மீது வழக்குபதிவு செய்துள்ளதாகவும், இரட்டை வேடங்கள் போடுவது திமுகவினருக்கு இயல்பானது என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் அண்ணாமலை மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்  நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.