அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்த பா.ஜ.க.

 
அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்த பா.ஜ.க.

மத்திய அரசால் பட்டியல் இன வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை  திமுக அரசு  சமத்துவபுரம் மற்றும் இலவச கலர் டிவி வழங்கி தன் கட்சியை வளர்த்து விளம்பரம் தேடிக் கொண்டதாக வள்ளியூரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்த பா.ஜ.க.வினர் | Vellore News BJP petitioners  at Ambedkar statue


மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. இதனை தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திராவிட கட்சியான திமுக அரசு, அந்த நிதியை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும் தங்கள் மனம் போன போக்கில் செலவிடுவதாகவும் பாஜகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

1996 ஆம் ஆண்டில் இருந்தே கருணாநிதியால் சமத்துவபுரம் என்ற பெயரிலும் இலவச கலர் டிவி வழங்கியும் தன் கட்சியினை வளர்த்து விளம்பரம் தேடிக் கொண்டதாக கூறும் பாஜகவினர், பட்டியல் இன சமுதாயம் இன்றளவும் இலவச மனை பட்டா கேட்டு வீடு இல்லாமலும் சுடுகாட்டிற்கு பாதை இல்லாமலும் அவதிப்படுவதாகவும் பட்டியல் இன சமுதாயத்தை திமுக ஏமாற்றிய துரோகத்தை தாழ்த்தப்பட்ட வேர்களின் தலைவர் அம்பேத்காரிடம் முறையிடுவதாகவும் கூறி
நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் வள்ளியூர் நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம் மூன்று பக்க அளவில் மனு கொடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.