"கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்"- பாஜக நிர்வாகியின் பரபரப்பு ஆடியோ

 
பாஜக

நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம் என பாஜக மாவட்ட தலைவர் பேசும் பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.

 

நெல்லை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் உடையார், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், உடையார், தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாதது வேதனையாக உள்ளது எனக் கூறுகிறார். அதற்கு காரணம் என்ன என்றும் வினவுகிறார். அதற்கு பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், “ நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம் என கூறுகிறார். நயினார் நாகேந்திரன் கட்சிக்காரர்களிடம் பணத்தை கொடுக்காமல் அவர் சொந்தக்காரர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டார்.


நயினார் நாகேந்திரன் பாஜகவினரை நம்பி பணம் கொடுக்காமல் மற்றவர்களிடம் பணம் கொடுத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம். நயினார் நாகேந்திரனின் உறவினர்கள், பாஜகவினரை மதிக்கவில்லை.எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனை கேட்டே உடையார், நயினார் நாகேந்திரன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சியை அழித்துவிட்டார். கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும் எனக் கூறும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.