பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது முதல்வருக்கு அழகா?- நாராயணன் திருப்பதி
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் கருவூலத்தின் சாவி 6 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டில் உள்ளதாக மோடி எவ்வித தரவுமின்றி பேசியுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை விமர்சிக்க பொதுப்படையாக 'தமிழ்நாடு' என குறிப்பிட்டு பேசிய மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தும், தனது ' மோடி வெறுப்பாளர்' முகமூடியை கலைக்க மறுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்களின் சாவியை திருடியவர்களை விமர்சித்தால், இவர் ஏன் தமிழர்கள் மீது பழி சுமத்தியதாக நாடகமாடுகிறார்?
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தும், தனது ' மோடி வெறுப்பாளர்' முகமூடியை கலைக்க மறுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
— Narayanan Thirupathy (மோடியின் குடும்பம்) (@narayanantbjp) May 21, 2024
ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்களின் சாவியை திருடியவர்களை விமர்சித்தால், இவர் ஏன் தமிழர்கள் மீது பழி சுமத்தியதாக நாடகமாடுகிறார்?
வட… https://t.co/G4RseN1y4j
வட இந்தியர்களை காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் திமுக வுக்கு தான் கை வந்த கலை! ஆனால், பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது முதல்வருக்கு அழகா? அரசியலுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்: