குடிநீர் தொட்டிகளில் மலம் கலக்கும் கொடூரம்- அரசின் நிர்வாகமின்மையை காட்டுகிறது: நாராயணன் திருப்பதி

 
narayanan stalin

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின்  குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

narayanan thirupathi

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே திருவந்தார் கிராமத்தில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து குடிநீர் தொட்டிகளில் மலம் கலக்கும் கொடூரங்கள் நடைபெறுவது அரசின் நிர்வாகமின்மையையே வெளிப்படுத்துகிறது. 


வேங்கை வயலில் பட்டியிலன மக்கள் வசிக்கும் ஊரில் உள்ள தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இன்று வரை கண்டுபிடிக்காத அவலத்தின் காரணமாகவே இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. குற்றம் நிகழா வண்ணம் தடுக்க வேண்டிய அரசு, குற்றம் நடந்த பின்னும் இது வரை கண்டுபிடிக்க முடியாமல் அல்லது மனமில்லாமல் அரசு செயலற்று இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடன் இந்த குற்றத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியது அரசின் கடமை. 

எதற்கெடுத்தாலும் துள்ளிகுதிக்கும் தி மு கவின் அடிமைகள் கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் அமைதி காப்பது எதனாலோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.