ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்லாததற்கு நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை: நாராயணன் திருப்பதி

 
narayanan stalin

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என பலர் அங்கலாய்த்து கொள்வதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

narayanan thirupathi


இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளி பண்டிகையை கொண்டாடும் தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என பலர் அங்கலாய்த்து கொள்கின்றனர். பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளில், உணர்வுகளில், மகிழ்ச்சியில், தங்களின் துருப்பிடித்த கொள்கையின் காரணமாக தாமும் பங்கு பெற முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டியது முதல்வர் ஸ்டாலின் தானேயன்றி, அவர் வாழ்த்து சொல்லாததற்கு நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 

ஏழரை கோடி மக்களின் நம்பிக்கைகளின் மீது நம்பிக்கையில்லாத ஸ்டாலின் அரசு, ஏழரை கோடி மக்களின் உணர்வுகளை ஏற்க முடியாத ஸ்டாலின் அரசு,  ஏழரை கோடி மக்களின் மகிழ்ச்சியில் பங்கு பெற முடியாத ஸ்டாலின் அரசு, அந்த ஏழரை கோடி மக்களின் நம்பிக்கைக்கும், உணர்வுகளுக்கும், மகிழ்ச்சிக்கும்   உரமாய், நாதமாய், அடித்தளமாய் அமையும் தெய்வங்கள் குடியிருக்கும் கோவில்களை விட்டு வெளியேறுவதே சரியாக இருக்கும். அதனால் தான் வலியுறுத்துகிறோம் "அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு" என்று!” எனக் குறிப்பிட்டுள்ளார்.