கருணாநிதிக்கு எதிராக செயல்படும் திமுக- நாராயணன் திருப்பதி

 
narayanan stalin

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் 'தேவையற்ற சட்டம்' என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வருவது நியாயமா? நீதியா? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

narayanan thirupathi

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாக்களை  ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதையடுத்து, நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி, மீண்டும் அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது தமிழக அரசு.

"1994ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு,  ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர் தான் அந்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது அன்றைய அ தி மு க அரசு. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில், தி மு கழகத்தின் சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது" என்று தி மு க வின் முன்னாள் தலைவர் கருணாநநிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம் : நெஞ்சுக்கு நீதி, நான்காம் பாகம், பக்கம் 512).

மேலும், 30, ஜூலை 1996ம் ஆண்டு அன்று தமிழக சட்டசபையில், அன்றைய கல்வி துறை அமைச்சரும், தி மு க வின்  நீண்ட கால பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அ தி மு க கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றதோடு, ஆளுநரே இனி வேந்தராக தொடருவார் என்றும், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி; மகாபாரதத்தைக் குறிப்பிட்டுச் சாடிய ஸ்டாலின் - நாராயணன்  திருப்பதி பதில் | BJP leader narayanan thirupathy slams CM stalin on his  mahabharatham quote about online ...

முன்னாள் தி மு க தலைவர் கருணாநிதி அவர்கள் 'தேவையற்ற சட்டம்' என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வருவது நியாயமா? நீதியா? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும். மேலும், மாநிலத்தில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக்காலத்தில் வேந்தர்  இருக்க மாட்டாரே, அப்போது யார் வேந்தராக இருப்பார்கள்? மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்களே? என்று, இன்று கருணாநிதி அவர்கள் இருந்திருந்தால் கேட்டிருப்பார் அல்லவா என்ற சிந்தனையில்லாமல் மீண்டும் இந்த மசோதாவை கொண்டு வருவது சரியா என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேபோல், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்ற அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி மு க அரசின் முடிவிற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வருவது நியாயமா? நீதியா? இது தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை பின்பற்றும் ஆட்சியா என்று மக்கள் கேட்பார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். மறைந்த முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களின் விருப்பத்திற்கெதிராக இன்றைய தி மு க அரசு செயல்படுவது என்? என்று வியப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.