முருகர் மாநாடு ஆன்மீகமா? அரசியலா?- டென்ஷனான நாராயணன் திருப்பதி

 
s s

ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் ஆன்மீக மாநாடு நடைபெற உள்ளது. மாநகர் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. 

இந்நிலையில் முருகரை வைத்து பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு நமது டாப் தமிழ் நியூஸ் சேனலுக்கு  அளித்த பிரத்யேக பேட்டியில் பதிலளித்த பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, முருக பக்தர்கள் ஆன்மீக மாநாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரசு அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய ரிலிஜியஸ் ரைட் இருக்கும்போது, நான் என்னுடைய கடவுளை வணங்க யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். கிறிஸ்தவர்கள் என்பது ஒரு மதமே இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் என்னை மதவாத சாயம் பூசுறாங்னுக்கு நினைக்க போறேன்... என்றும் கடுமையாக கொந்தளித்தார்.

இந்துகளுக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் அரசு செயல்படும்போது, பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் தவறா? திருப்பரங்குன்றத்தில் நடந்த அநியாயங்கள்! திருப்பரங்குன்ற மலையை சிக்கந்தர் மலையாக பெயர் மாற்றம் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முயன்றன. ஓட்டுக்காக இந்து மக்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய ஆதரவாகவும் திமுக அரசு செயல்பட்டது. அதனால் இந்து மக்களுக்காக இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது என்றும் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்தார்.