“கோவில் அன்னதானத்தில் புழு”- நயினார் நாகேந்திரன் கண்டனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “திருக்கோவில் அன்னதானத்தில் புழுவை நெளியவிட்ட திரு. ஜோசப் விஜய் அரசு! திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருக்கோவிலின் சேவைக் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டதில் காட்டிய அக்கறையை அன்னதான உணவின் தரத்தில் காட்டாதது ஏன்? திரு. ஜோசப் விஜய் அரசுக்கு திருக்கோவிலின் வருமானம் மட்டும் முக்கியம், பக்தர்கள் உயிர் முக்கியமில்லையா?
திருக்கோவில் அன்னதானத்தில் புழுவை நெளியவிட்ட திரு. ஜோசப் விஜய் அரசு!
— Nainar Nagenthran (@NainarBJP) June 25, 2026
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மதியம் பரிமாறப்பட்ட அன்னதானத்தில் புழு இருந்ததாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர்… pic.twitter.com/eRtwMi1sof
அன்று முறுக்கு பாக்கெட்டு உற்பத்தித் தேதிக்கு ஆதாரம் கேட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்கள், இன்று புழு நெளிந்ததாக எழுந்துள்ள புகாரை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது! உடனடியாக புகாரை தீர விசாரித்து, அன்னதான உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் திரு. விஜய் அவர்கள் தலைமையிலான அரசை வலியுறுத்துகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

