தேசிய கீதத்தை அவமதித்த ராகுல்காந்தி- பாஜக கண்டனம்

 
s

தேசிய கீதத்தை அவமதித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 


இதுதொடர்பாக வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், “தேசிய கீதத்தை அவமதித்த திரு. ராகுல் காந்திக்குக் கண்டனம்! தேசிய கீதம் என்பது ஒரு நாட்டின் ஆன்மா, அது இசைக்கப்படும் போது எழுந்து நின்று, அசையாமல் மரியாதை செலுத்த வேண்டும் என்பது சிறு குழந்தையும் அறிந்த அடிப்படை ஒழுக்கம். ஆனால், தேசிய கீதம் ஒலிக்கும் போது செல்ஃபி எடுப்பதிலும், கைகுலுக்கிக் கொள்வதிலும் மும்முரமாக இருந்த திரு. ராகுல்காந்தி அவர்களுக்கு, இந்த மண்ணின் மாண்பு தெரியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இது ஏதோ தனிமனிதத் தவறு அல்ல; பாரதத்தின் அடையாளங்களைச் சிறுமைப்படுத்துவது என்பது காங்கிரஸ் கட்சியின் மரபணுவிலேயே ஊறிய ஒன்றாக மாறிவிட்டது. நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளையும், இந்த மண்ணின் இறையாண்மையையும் எள்ளி நகையாடும் இத்தகைய செயல்களை இந்திய மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.