“த்ரிஷாவுடன் விஜயை தொடர்புபடுத்தி வாய் தவறி பேசிவிட்டேன்”- நயினார் நாகேந்திரன் வருத்தம்

 
nainar nainar

நடிகை திரிஷா விஜயை தொடர்புபடுத்திய பேச்சுக்கு நெல்லையில்  பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார்.

Nainar Nagendran


பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது நடிகர் விஜய் முதலில் திரிஷாவை விட்டு வர வேண்டும் என்று பேசினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் மகளிர் அணியினர் கண்டனம் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் திரிஷாவே தனது வழக்கறிஞர் மூலமாக என்று அறிக்கை வெளியிட்டார். 

அதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, நடிகை திரிஷா என்னைப் பற்றி அரசியல் தலைவர் ஒருவர் அறுவருக்கத்தகைய வகையில் பேசி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். என்னுடைய அரசியல் வாழ்க்கை பொருத்தவரையில் எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை, நானும் பேசியதில்லை. அன்றைக்கு தவறி வந்த ஒரு வார்த்தை. அதற்கு என்னுடைய அகில இந்திய தலைவி வானதி சீனிவாசன் என்னிடம் பேசியிருந்தார்கள். நேற்று கூட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு சென்றேன் அவரும் இது குறித்து என்னிடம் பேசினார்.  உண்மையில் நான் பேசிய கருத்திற்கு யாரேனும் வருத்தம் படக்கூடிய சூழ்நிலை இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Advertisement