“சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு முழு ஆதரவையும் கொடுக்கணும்”- மு.க.ஸ்டாலினுக்கு நயினார் வேண்டுகோள்

 
Nainar MKstalin Nainar MKstalin

மது தமிழ் மண்ணின் மைந்தரான அண்ணன் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TB BJP Leader Nainar Nagendran asks stalin for not wishing for tamil new  year ஆவின்ல கூட இல்லையே.. முதல்வரே தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து எங்கே? -  நயிநார் நாகேந்திரன் | Times Now ...

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக வேண்டுகோள்!நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மாண்புமிகு மகாராஷ்டிரா ஆளுநருமான அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும். இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் நமது மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் திரு. நவீன் பட்நாயக் அவர்கள் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


திரு. பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான அண்ணன் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.