“தவெக அமைச்சர்கள் எல்லாம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்”- நயினார் நாகேந்திரன்
Aug 18, 2026, 19:06 IST1787060177680
தவெக அமைச்சர்கள் ஊழல் செய்ய தொடங்கிவிட்டார்கள், எந்தெந்த அமைச்சர்கள் எங்கெங்கே வாங்கினார்கள் என்ற லிஸ்ட் என்னிடம் உள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆட்சி அமைத்து 100 நாள் கூட ஆகவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்களது வேலையை ஆரம்பித்து விட்டனர். வேலை என்பதின் அர்த்தம் எல்லோரும் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க..எங்கல்லாம் வாங்குறாங்க. எல்லா லிஸ்டும் எங்க கையில் இருக்கு, எல்லா விசயத்தையும் வெகு விரைவில் வெளியிடுவோம் யார், யார் எந்தெந்த துறைகளில் எங்கு வாங்குகிறார்கள் என்ற அக்குவேறான அணிவேறான விவரங்கள் அடங்கிய லிஸ்ட் எங்களிடம் உள்ளது. விரைவில் பட்டியலை வெளியிடுவேன். தவெக அரசின் 100 நாள் சாதனை என்பது வேதனை நாள்” என்றார்.

