விஜய் ஆட்சியமைக்க யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள்? அப்போ மட்டும் பா.ஜ.க உங்களுக்கு இனிச்சிதா?- நயினார் நாகேந்திரன் ஆவேசம்
விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க விடுங்கனு யாருக்குலாம் ஃபோன் போட்டு சொன்னீங்கனு நான் சொல்லவா இப்போ! அப்போ மட்டும் பா.ஜ.க இனிச்சிதா உங்களுக்கு? என அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “முதல்வர் சட்டமன்றத்தில் செய்கை காட்டுகிறார். இன்னும் திரைப்படத்தில் நடிப்பது போல் நினைத்து கொள்கிறார், இதுபோன்று முன்பு செய்தவர்களின் நிலை என்னானடு என்பது நமக்கு தெரியும், முதல்வர் தனது தகுதி அறிந்து அதற்கான வரம்போடு சட்டமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற முடியாத நிர்மல்குமார் எம்எல்ஏவாக இருக்க தகுதியற்றவர். தவெக மாதிரி சாதாரண கட்சியல்ல பாஜக, அடுத்த தேர்தலில் தவெக இருக்குமா? என்றே தெரியாது. முந்தைய ஆட்சியில் மின்தடைக்கு அணில் காரணம் என்றார்கள், தற்போது குரங்கு என்கிறார்கள்
விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க விடுங்கனு யாருக்குலாம் ஃபோன் போட்டு சொன்னீங்கனு நான் சொல்லவா இப்போ! அந்த பட்டியலை நான் வெளியிடட்டுமா? அப்போ மட்டும் பா.ஜ.க இனிச்சிதா உங்களுக்கு? அமைச்சராக இல்ல, சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூட தகுதியில்லாதவர் நிர்மல்குமார். இதுபோன்ற அரசியல் ஸ்டண்ட்களை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என எச்சரித்தார்.

