“எப்படி நாம் ஆட்சிக்கு வந்தோம் என்ற அதிர்ச்சியிலேயே இன்னும் விஜய் இருக்கிறார்”- நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பாலில் வன்கொடுமை மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இந்த தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம். தி.மு.க அரசுக்கும் த.வெ.க அரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. முதல்வர் விஜய் இன்னும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. எப்படி நாம் ஆட்சிக்கு வந்தோம் என்ற அதிர்சியிலேயே இன்னும் விஜய் இருக்கிறார்? 24 மணிநேரத்தில் 12 கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் யாரும் எதற்கும் ஆசைப்பட்டு கட்சிக்கு வரவில்லை. எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையுடன் யாரும் பாஜகவுக்கு வரவில்லை. சித்தாந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட இயக்கம் பாஜக. யார் போனாலும் சரி இந்த கட்சியை ஆட்டவோ, அசைக்க முடியாது. இந்த கட்சியில் இருந்து நிறைய பேர் வெளியே சென்றுவிட்டனர். இந்த கட்சியிலிருந்து யார் வெளியே போனாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. போனவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். திரும்பி யார் வந்தாலும் தாய் உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு அவர்களுக்குரிய பொறுப்புகள் கொடுக்கப்படும்” என்றார்.

