“நானும் ஒரு கேஸ் டீலர்தான்... கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எனக்கூறுவது பொய்”- நயினார் நாகேந்திரன்

 
அ

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எனக் கூறுவது மிகப்பெரிய பொய் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

nainar

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நாளை பிரதமர் தலைமையில் திருச்சி பஞ்சப்பூரில் அரசு விலா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எ.டி.ஏ வின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.க தலைவர் ஜி.கேவாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாளை நடைபெறும் விழா தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும். இதில் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.

பிரதமர் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாது. விரைவில் நாங்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குவோம். தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் வெல்லும் என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்க போவது தமிழக மக்கள் தான். திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதம் 1000 கொடுக்கவில்லை, பாராளுமன்ற தேர்தல் வந்ததால் அதை கொடுத்தார்கள். இந்தாண்டு தேர்தலால் பொங்கல் பணம் கொடுத்தார்கள். விஜையை சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்துள்ளது சிபிஐ , அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்பு. எங்கள் கூட்டணியில் புது கட்சிகள் வரலாம். ஆனால் விஜய் வருவது குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது.


கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். நான் கேஸ் டீலர், எங்கு உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமோ நான் தருகிறேன். ஹோட்டல்களில் உணவுகளை குறைத்ததற்கும், சிலிண்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹோட்டல்களில் உணவு இல்லை என எதிர்க்கட்சிக்காரர்கள் எழுதி போட்டிருப்பார்கள். அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. மற்ற கட்சிகள் குறித்து திமுக கவலைப்பட வேண்டியதில்லை. விஜய் தங்களுடைய கட்சியின் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்திவிட்டு கொள்கை எதிரி பாஜக என கூறட்டும். வெறும் கொள்கை என்கிற வார்த்தையை மட்டும் கூறுவதால் அதற்கு என்ன அர்த்தம் என தெரியவில்லை. சீனி என எழுதி வைத்தால் மட்டும் இனிக்காது” என்றார்.