ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏன் இவ்வளவு விளம்பரம்?- நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏன் அதிக விளம்பரம் தருகிறார்கள் என தெரியவில்லை என பாஜக மாநில  நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் ஒரு வாரத்தில் இணையும் என நேற்றுதான் கூறியிருந்தேன். அதற்கு இன்னும் ஏழு நாட்கள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை டப்பா எஞ்சின் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் கூட்டணி மக்கராக உள்ளது. தேர்தலுக்குப் பின்பு எது மக்கரான என்ஜின், எது டப்பா எஞ்சின் எது வந்தே பாரத் இன்ஜின் என்பது அனைவருக்கும் தெரிய வரும்.

திரைப்பட தணிக்கை குழு சுதந்திரமான அமைப்பு. ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மட்டும் தான் அதற்கு ஏன் தணிக்கை சான்றிதழ் தரவில்லை என்பது தெரியும். அந்த படத்திற்கு மட்டும் ஏன் அனைவரும் விளம்பரம் தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை. த.வெ.க ஆட்சி அமைத்தால் ஊழலற்ற ஆட்சியை தரும் என விஜய் பேசியது  நகைச்சுவையாக இல்லையா? திமுக ஆட்சியில் ரூ.4000 கோடி ஊழல் நடந்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளார். பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து பொறுத்து இருந்து பாருங்கள்” என்றார்.