“டிடிவி, ஓபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணி இணைய வேண்டும்”- நயினார் நாகேந்திரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்.,க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியது மிகப்பெரிய பிழையை பாஜக செய்திருக்கிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். அவர்கள் திட்டத்தை கொண்டு வரும் பொழுது காந்தி பெயரை அவர்கள் வைக்கவே இல்லை. இப்ப மட்டும் காந்தி மீது எப்படி அக்கறை வருகிறது? டிடிவி, ஓபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணி இணைய வேண்டும். என்னை பொருத்தவரை திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதில் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
கூட்டணிக்கு இன்னும் 90 நாட்கள் இருக்கிறது, அதற்குள் அதிக மாற்றம் இருக்கிறது. வந்தவுடன் தெரிவிக்கிறேன். இதுவரையிலும் நடிகர் தம்பி விஜய்யை பொருத்தவரை ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. மீடியாவில் இமேஜை கிரியேட் செய்கிறீர்கள். மிகப்பெரிய தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவருக்குப் பிறகு தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து நடத்துவது இயலாத காரியம். அதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. தூத்துக்குடியில் தவெக கட்சியில் கூட ஒரு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கவில்லை என்று அந்த நபர் பல்வேறு பிரச்சனைகள் ஈடுபட்டார். விஜயகாந்த் மிகப்பெரிய நல்ல தலைவர். அவர் இருக்கும் பொழுது இதுவரை கொண்டுவர முடியவில்லை. அவர் இறந்த பிறகு துணைவியார் அதை நல்ல முறையில் வழிநடத்தி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்ஐ ஏற்றுக்கொள்வது அவர்களின் உட்கட்சி விவகாரம். அது உண்மையா? பொய்யா என்பது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது” என்றார்.


