“வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை; மக்களுக்கு எதாவது செய்யணும்”- நயினார் நாகேந்திரன்
மத்திய அரசுடைய பணத்தில் சென்னையிலிருந்து 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “விஜய் எங்கள் பி டீம் என திமுகவினர் வதந்தி பரப்புகிறார்கள். விஜய் வெறும் மாஸ் மட்டும் காட்டினால் போதாது, மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும். புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களை நம்பி வாக்குகளை மக்கள் வீணாக்க வேண்டாம். திமுகவினர் சட்டமன்ற தொகுதிக்காக பதுக்கி வைத்திருக்கும் பணம் எங்கே உள்ளது என்பது தெரியும் எனவும், உரிய நேரத்தில் பறிமுதல் செய்யப்படும். திமுக அரசுடைய ஒத்துழைப்போடு மெத்தபெட்டமைன் முதல் கஞ்சா வரை போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீதிக்கு தலை வணங்காத திமுக ஆட்சியை வரும் தேர்தலில் அகற்ற வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கூறினார்.


