NDA-வில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி?- பழனிசாமியை சந்தித்த பின் நயினார் நாகேந்திரன் பேட்டி
அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றதற்கு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன், தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கவில்லை என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது அதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
டிடிவி, ஓபிஎஸ்-ஐ கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக எதுவும் பேசவில்லை, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றார். நாளை மறுதினம் டெல்லி செல்ல உள்ளதாகவும் தெரிவித்த நயினார் நாகேந்திரனிடம் தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா ? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்தபடி புறப்பட்டு சென்றார்.


