“விஜய் கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்கவில்லை..! எப்படி அவரது கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும்?”- நயினார் நாகேந்திரன்
விஜய் கவுன்சிலர் தேர்தலில் கூட நிக்கல, மக்கள் தான் ஆதரவு யாருக்கு என சொல்வாங்க அதற்குமுன் கருத்து சொல்லமுடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தூத்துகுடியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வைகை ஆற்றில் ’உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் கிடந்ததாக செய்தி பார்த்தேன். வேதனையாக இருந்தது, அது உண்மையானல், இது தான் இந்த ஆட்சிக்கு சாட்சியாக இருக்கும்” என்றார்,
தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த இந்த தேர்தலில் த.வெ.க விஜய் கட்சியின் தாக்கம் இருக்கும் என கூறியதற்கு கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், “மதிப்பிற்குறிய விஜய் எந்த தேர்தலிலும் நிற்கவில்லை, கவுன்சிலர், சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவில்லை, யாருக்கு பலம் என மக்கள் தான் சொல்லவேனும், அதற்குமுன் கருத்துகணிப்பு சொல்ல முடியாது” என கூறினார்

