அன்வர் ராஜாவிற்கு தற்போது என்ன பிரச்னை? - நயினார் நாகேந்திரன்

 
Nainar Nainar

பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கும்போது அன்வர் ராஜா கட்சியில்தான் இருந்தார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் கூட்டணி வைத்தபோது, அன்வர் ராஜா அதிமுகவில் இருந்தார். இன்று அவருடைய பிரச்சனை என்னவென்று நமக்கு தெரியாது. வாழும் ராஜேந்திர சோழன் பிரதமர் மோடி, அவரால் எல்லோருக்கும் நல்லதுதான் நடக்கும். பாஜகவை நெகட்டிவ் ஃபோர்ஸ் என்றும், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது என்றும், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறி அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து திமுகவினர் பதற்றத்தில் உள்ளனர்” என்றார்.