NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு!
முருக பக்தர்கள் மாநாட்டில் நாங்கள் எல்லாம் குவியும் போது அது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மொடாக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காகவே வரும் ஜூன் 8 ஆம் தேதி அமித்ஷா வருகிறார். முருக பக்தர்கள் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். அனைவரும் ஓரணியில் இணைந்து திமுக அரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. தவெக தலைவர் விஜய்க்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன். 2026-ல் ஆளும் திமுக அரசுக்கு முடிவு கட்டப்படும்.
பாமகவில் நிலவும் குழப்பங்களுக்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. எல்லோரும் சமாதானமாக செல்வது தான் பா.ம.க- விற்கு நல்லது. பாமகவில் நடப்பது அப்பா, மகனுக்கும் இடையேயான பிரச்சனை” என்றார்.


