தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஓ.பி.எஸ்., ஆகியோர் உள்ளனர்: நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். வரக்கூடிய தேர்தலை சந்திக்க ஈபிஎஸ் உள்ளிட்டவர்களிடம் ஒருங்கிணைந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும், ஈபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளார்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம்.ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும் அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார். தமிழை உயர்த்தி பேசுவது தப்பில்லை, அதற்காக மற்றொரு மொழியோடு அதை ஒப்பிட்டு பேசுவது என்பது தான் தவறு கமலுக்கோ அவரது கட்சிக்கோ பாஜக ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

இந்தியா என்பது பல மொழிகள் பலதரப்பு மக்கள் வாழுகின்ற நாடு அதனால் ஒன்றில் இருந்து தான் மற்றொன்று பிறந்தது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை.  இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை, வரக்கூடிய காலங்களில் அது சாத்தியமா என்று பார்க்கலாம். ஆனால் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். திமுக தோல்வி பயத்தில் இருக்கிறது. தோல்வி பயத்தில் இருப்பதால்தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். வரக்கூடிய தேர்தலை சந்திக்க ஈபிஎஸ் உள்ளிட்டவர்களிடம் ஒருங்கிணைந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும், ஈபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.