பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்- நயினார் நாகேந்திரன்
பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பகுதியில் அப்பாவி மக்கள் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்க்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இந்திய எல்லையோர பாகிஸ்தான் பகுதிகளில் இருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை தாக்கி இந்திய ராணுவம் துல்லியமாக அளித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் சார்பாக இந்தியா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது அதை இந்தியாவின் ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் அனைத்து சிற்றுகளையும் வெற்றிகரமாக தாக்கி அளித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் மூலம் சூழல் இருந்த நிலையில் இரண்டு தரப்பையும் அழைத்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாட்டிற்கும் இடையே இனி தாக்குதல் நடைபெறாது என அறிவித்தார். அதன் பின் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி திரும்பியது.
இந்த நிலையில் ஆபரேசன் சிந்தூரை சிறப்பாக செயல்படுத்திய ராணுவத்திற்கும் பிரதமருக்கும் நன்றி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் பாஜக சார்பாக தேசிய கொடி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருந்து மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபி வரை பேரணி நடைபெற்றது. இதில் 120 அடி நீளம் கொண்ட தேசியக்கொடியை பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் ஏராளமான பாஜகவினர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பேரணி நடைபெறும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களுடன் நாங்கள் என்றும் இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டும் விதமாகவும் தான் இந்த பேரணி நடத்தப்படுகிறது. நீரும் ரத்தமும் ஒன்றாகாது, யாருக்காகவும் போர் நிறுத்தப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் இனி தாக்குதல் நடந்தால் அது அணு ஆயுத போராக தான் நடக்கும்" என்றார்.


