தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா?- நயினார் நாகேந்திரன் பதில்

தமிழ்நாடு பாஜகவின் 13-வது தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன். பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவும் நயினார் நகேந்திரனை நாற்காலியில் அமரவைத்தனர். முன்னதாக பரிவட்டம் கட்டி செண்டை மேளம் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றி மத்திய தலைமைதான் முடிவு செய்யும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து அன்றைய சூழலில் உள்துறை அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வார்கள். ஆனால் பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி இல்லை என ஈபிஎஸ் கூறுகிறார். ஆனால் அவர் தான் கூட்டணி பற்றி அமித்ஷாவிடம் பேசினார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கியுள்ள காங்கிரஸ்க்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும். மிகப்பெரிய ஊழல் கட்சி என்று சொன்னால் அது காங்கிரஸ் கட்சிதான்.” என்றார்.
கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியில் பா.ஜ.கவிற்கு பங்கில்லை என ஈபிஎஸ் கூறிய நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் இவ்வாறு பதிலளித்தார்.