“நானும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி உறவுடன் இருக்கிறோம்”- நயினார் நாகேந்திரன்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பான்மையாக யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் அமைச்சரவையை அமைப்பார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக முதலமைச்சர் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று கூறியது அவர்கள் கூட்டணிக்காக கூறி இருக்கிறார்கள். ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் அவர்கள் அப்படி கூறியிருக்கிறார்கள். நாங்கள் கட்டாயமாக சொல்கிறோம் 200 இடங்களில் வெற்றி பெறுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது விஜய் கூட்டணிக்கு செல்வார்களா? என்பது கேள்விக்குறியே. திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை அவர்கள் விட்டதே இல்லை. ஜேபி நட்டா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது பேச்சுவார்த்தை நடத்தி அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தந்தார்கள்.அடுத்த முதலமைச்சர் ஆக போவது இபிஎஸ். பெரும்பான்மையாக யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் அமைச்சரவையை அமைப்பார்கள். இபிஎஸ் தான் முதலமைச்சர்.
நானும் கருத்துக்கணிப்பை எடுத்து இருக்கிறேன். நெல்லையில் கூடுதலாக 20 சதவீதம் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது. தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிந்தவுடன் நானே தெரிவிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த டிமாண்டும் எங்களுக்கு கிடையாது, தேசிய ஜனநாயக கூட்டணி எங்களுக்கு வெற்றி பெற வேண்டும். தேமுதிகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை.சுதீஸ் நீண்ட நாள் நண்பர். கூட்டணி குறித்த நான் இதுவரை பேசவில்லை. பிரதமர் வருகின்ற பொழுது கூட்டணியை மேடையில் பார்க்கலாம். முதலில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் ஜெயிக்கட்டும், அதன் பிறகு அடுத்தது பேசட்டும்.நானும் அண்ணாமலையும் அண்ணன் தம்பி உறவுடன் இருக்கிறோம். எனக்கும் அண்ணாமலைக்கும் உரசல் என்பது பொய். மக்களவை தேர்தலில் நெல்லையில் என்னை போட்டியிடுமாறு கூறியதே அண்ணாமலைதா, ” என்றார்.

