அடுத்த பாஜக தலைவரா? நயினார் நாகேந்திரன் அவசர டெல்லி பயணம்
Updated: Apr 7, 2025, 22:06 IST1744043815612

பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்களை நயினார் நாகேந்திரன் நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மாநில தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில் டெல்லிக்கு சென்றுள்ளார். அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பேரில் நயினார் நாகேந்திரன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.