அண்ணாமலையால் கட்சி வளர்ந்துள்ளது- நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது கட்சி பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் பதவிக்கான விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தும், வேறு யாரும் விருப்பம் மனு தாக்கல் செய்யாததால் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நயினார் நாகேந்திரன் தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.
வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “கட்சியின் அறிவுரைப்படி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். என்னை மாநில தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி. அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது கட்சி பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு அளிக்க வேண்டுமோ அதனை தேசிய தலைமை முடிவு செய்யும் 202 தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் அதற்குள் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும்.” என்றார்.