“திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்ட்டவுன் ஆரம்பம்; ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது”- மோடி

 
மோடி

தமிழ் சகோதர.. சகோதரிகளே.. வணக்கம்! என தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சிறப்புரையை தொடங்கினார். 

நிகழ்ச்சியில் பேசிய மோடி, “2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவகும். சில நாட்களுக்கு முன் பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம். தேச பக்தியும் வீரமும் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது.ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்கள் தமிழக எதிர்காலத்தை தீர்மானிப்பர். தேஜ கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த ஊழலற்ற மாநிலமாக ஆக்க வேண்டும். திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. 

மக்களுக்கு திமுக நம்பிக்கை துரோம் செய்கிறது. ஊழல், மாஃபியா சர்க்கார் திமுக சர்க்கார்.  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு. தமிழ்நாட்டிலும் இரட்டை எஞ்சின் ஆட்சி நடக்கிறது. திமுக அரசு CMC அரசு. கரெப்ஷன், மாஃபியா, கிரிமினல் ஆதரவு அரசு. மதுராந்தகத்தில் காணப்படும் உற்சாகம் ஒரு தெளிவான மனநிலையைப் பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் திமுகவின் தவறான ஆட்சியிலிருந்து விடுதலை விரும்புகிறார்கள். என்டிஏ கூட்டணியே மக்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என குழந்தைக்கும் தெரியும். ஒரே ஒரு குடும்ப நலனுக்காக நடத்தப்படும் ஆட்சி, ஜனநாயகமற்ற அரசு இது” என்றார்.