செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு- வானதி சீனிவாசன் கண்டனம்

 
வானதி வானதி

தமிழகம் தலை குனியாது என்று திரும்பும் திசையெல்லாம் வெற்று விளம்பரம் செய்து வரும் திராவிட மாடல் அரசு இன்று கோவை புதிய செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடாமலேயே திறப்பு விழாவினை நடத்தியிருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image


கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி ஒதுக்கீட்டில் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. செம்மொழி வனம், மூலிகை, மகரந்த தோட்டம், பாலைவனத் தோட்டம் என 28 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு, கலிபுடா, வரிகமுகு மரங்கள் உள்ளன. 2,000க்கும் மேற்பட்ட ரோஜா வகைகளுடன் தோட்டம், கடையெழு வள்ளல்களின் கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 500 பேர் அமரும் வகையில் திறந்தவெளி அரங்கம், உணவகம், ஒப்பனை அறை, ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற சிறப்பம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 453 கார்கள், 10 பேருந்துகள், 1,000 பைக்குகள் நிறுத்தும் வசதி, மழைநீர் சேமிப்பு வடிகால், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

Image

இந்நிலையில் தமிழகம் தலை குனியாது என்று திரும்பும் திசையெல்லாம் வெற்று விளம்பரம் செய்து வரும் திராவிட மாடல் அரசு இன்று கோவை புதிய செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடாமலேயே திறப்பு விழாவினை நடத்தியிருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழகம் தலை குனியாது என்று திரும்பும் திசையெல்லாம் வெற்று விளம்பரம் செய்து வரும் திராவிட மாடல் அரசு இன்று கோவை புதிய செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடாமலேயே திறப்பு விழாவினை நடத்தியிருக்கிறது. மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ்நாடு என்று வசனம் பேசும் முதல்வரே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நிகழ்விலே தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடாதது நீங்கள் எந்த அளவிற்கு தமிழர்கள் மீது, தமிழ்நாட்டின் மீதும் பற்று வைத்திருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறை என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா என்றே தெரியாத அளவிற்கு தான் இருக்கிறது இந்த விடியா திராவிட மாடல் ஆட்சியில்” எனக் குறிப்பிட்டுள்ளார்.