“அமைச்சர்களிடம் நேர்மை இல்லை; முதல்வருக்கு தனது ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை”
தமிழக துணை முதல்வருக்கு சமூக ஒற்றுமையின் மீது நாட்டமில்லை, தமிழக முதல்வருக்கோ தனது ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கு சுமார் 80,000 அரசு மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது வெறும் 30,000 மருத்துவர்கள் கூட இல்லையெனவும், தமிழக அரசு மருத்துவப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமெனவும் அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது, தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகக் குளறுபடிகளையே குறிக்கிறது.
🩺கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுமார் 1 லட்சம் மக்களுக்கான பழவேற்காடு அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார் என்ற செய்தியும் வெளியாகியிருந்த நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறைகளைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் முதல்வரே?
🩺அரசு மருத்துவமனையை நாடுவோர் பெரும்பாலும் ஏழை மக்கள் தானே என்ற இளக்காரமா?
🩺மருத்துவர் பற்றாக்குறையால் இயங்கும் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சைக்கு எவ்வாறு உறுதியளிக்க முடியும்?
🩺கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளின்றி பிரசவத்தின் போதும், சரியான சிகிச்சைகள் கிடைக்காமலும் பல உயிர்கள் பலியாகியுள்ளதே, அதெல்லாம் உங்களை உறுத்தவில்லையா?
🩺சரியாக வைத்தியம் பார்க்கவில்லை என்று அரசு மருத்துவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைகளுக்கு, மருத்துவர்களின் பற்றாக்குறையே மறைமுக காரணி என்பது கூட உங்களுக்கு புரியவில்லையா?
🩺ஒவ்வொரு முறை இவ்விவாதம் எழும்போதும், துறை அமைச்சர் திரு.
@Subramanian_ma
அவர்கள், தமிழக அரசு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வெற்று அறிக்கை அளித்தால் மட்டும் போதுமா?
🩺மேலும், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய உங்களுக்கு முதல்வர் பதவி எதற்கு? என தமிழக பாஜக ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனை மேற்கோள்காட்டியுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லை, அரசு நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இல்லை, அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை, அரசுப் பேருந்துகளில் பிரேக் இல்லை, அரசு அமைச்சர்களிடம் நேர்மை இல்லை, தமிழக துணை முதல்வருக்கு சமூக ஒற்றுமையின் மீது நாட்டமில்லை, தமிழக முதல்வருக்கோ தனது ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை - இவைதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கோர பிம்பம்1” எனக் குறிப்பிட்டுள்ளார்.