திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு- வானதி சீனிவாசன் வரவேற்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 46%ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே 42%ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் 46%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 3, 2023
அதே சமயம் திருக்கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு தரப்படவேண்டும்.
அவர்களை நிரந்த…
தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அதே சமயம் திருக்கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு தரப்படவேண்டும். அவர்களை நிரந்த பணியாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை பரிசீலிக்கும்படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.