செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் இடம் பெறப்போவது அதன் பெருமைக்கு மணிமகுடம்- வானதி சீனிவாசன்

 
vanathi--srinivas-3

புதிய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்கப்போகும், தமிழ்நாட்டின்  செங்கோலை வைக்க முடிவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

vanathi srinivasan

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “1947இல் நம் இந்திய தேசம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் மூலம் பரிசளிக்கப்பட்ட செங்கோல்! மன்னர் ஆட்சி காலம் தொடங்கி, முடியாட்சி வரையில் எங்கெல்லாம் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்தது செங்கோல்.

பல்வேறு  வரலாற்று பெருமைகளையும், சிறப்புகளையும்  தாங்கிய சிறப்புமிகு செங்கோல், இந்திய தேசத்தின் சுதந்திரத்தை பறைசாற்றிய செங்கோல், நீதியின், நன்னெறி தவறா ஆட்சியின் அடையாளமாய் திகழ்ந்த செங்கோல்,  சரித்திர புகழும், தொன்மையும்,  பெருமையும் வாய்ந்த சோழர் செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் இடம் பெறப்போவது, அதன் பெருமைக்கு மணிமகுடம்!”


நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.  இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக அறிவித்துள்ளது. இதேபோல்   திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.