இரவில் பெண்களை துரத்தும் திமுக உடன்பிறப்புகள், யாருடைய தம்பிகள்?- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

இரவில் பொதுவெளியில் பெண்களைத் துரத்தும் திமுக உடன்பிறப்புகள், யாருடைய தம்பிகள்? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “இரவில் பொதுவெளியில் பெண்களைத் துரத்தும் திமுக உடன்பிறப்புகள், யாருடைய தம்பிகள்  சென்னை ECR சாலையில் காரில் சென்ற பெண்களைத் திமுக கொடியுடன் கூடிய மற்றொரு காரில் வந்த போதை ஆசாமிகள் வெறிகொண்டு துரத்துகின்றனர், பயந்த அந்த இளம் பெண்கள் அலறித் துடிக்கின்றனர், ஏதோ சினிமா காட்சி போல தோன்றும் இந்த காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எல்லாம் திமுகவினரின் பெயர் அதிகம் அடிபடுகிறதே, திமுக-க்காரன் என்பது குற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அடையாளமா என்ன? நாட்டில் உள்ள பாலியல் குற்றவாளிகளை எல்லாம் உறவுமுறை சொல்லிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்காமல் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் அறிவார்ந்த அறிவாலய தலைவர்கள், இந்தப் பெண்களை என்ன குறை சொல்லிக் கொச்சைப்படுத்தப் போகிறார்கள் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.