கொங்கு மண்டலம் மு.க.ஸ்டாலினை மன்னிக்காது- வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.

Will Stalin greet people on Hindu festivals: Vanathi Srinivasan

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 'ஜி.எஸ்.டி. குறித்த தொழிமுனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று' என்று கூறியிருக்கிறார்.கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு திமுக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்னையை திசைதிருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

திமுக அரசின் அபரிமிதமான மின் கட்டண உயர்வாலும், சொத்துவரி, பதிவு கட்டண உயர்வாலும் 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, கோவையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில், மத்திய நிதியமைச்சருடன், தொழில்முனைவோர்கள் நேரடியாக சந்திக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். தொழில்முனோர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கோரிக்கைகள், ஆலோசனைகளை நிர்மலா சீதாராமன் பொறுமையுடன் கேட்டு பதிலளித்தார்.

இந்து மதத்துக்கு எதிரி இல்லையெனில், இனி இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச்  சொல்வாரா ஸ்டாலின்?"- வானதி| Should CM Stalin will wish Hindu festivals, BJP  MLA vanathi ...

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதி எண் 181-ல் “பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அறிவித்திருந்தது. 2016 ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு வாக்குறுதியை அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழிந்தும் இதனை நிறைவேற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தை பகுதி நேர ஆசிரியர்கள் தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்.

இருப்பினும், அரசு மருத்துவர்கள், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டங்களை மேற்கொண்டபோது இதேபோன்று உறுதிமொழிகள் அளிக்கப்பட்டு, அவை நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், தற்போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஓர் உறுதிமொழி அரசு சார்பில் அளிக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. அதாவது, தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டார்கள். பகுதி நேர ஆசிரியர்களின் ஐயத்தை போக்கும் வகையில், அவர்களை பணி நிரந்தரம் செய்யவும், இதேபோன்று இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.