குடிக்கும் நீரில் மலத்தை கலப்பது என்பது மனிதக்குலத்துக்கே அருவருக்கத்தக்க செயல்- வானதி சீனிவாசன்

குடிக்கும் நீரில் மலத்தை கலப்பது என்பது மனிதக்குலத்துக்கே விரோதமான, அநாகரிகமான, அருவருக்கத்தக்க செயல் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த சம்பவம் நடத்திய குற்றவாளிகளை யார் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தற்போது அதே போல் காஞ்சிபுரம் அருகே திருவந்தார் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்துள்ளனர் கயவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த சம்பவம் நடத்திய குற்றவாளிகளை யார் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 21, 2023
தற்போது அதே போல் காஞ்சிபுரம் அருகே திருவந்தார் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர்… pic.twitter.com/DtYGZKhzum

காஞ்சிபுரம் அருகே வேங்கை வயல் போல செய்த சாதிவெறியர்கள் மீது தமிழக அரசு மிகத் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிக்கும் நீரில் மலத்தை கலப்பது என்பது மனிதக்குலத்துக்கே விரோதமான, அநாகரிகமான, அருவருக்கத்தக்க செயல். இந்த செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். நடப்பது சமூகநீதி அரசு என்று பறைசாற்றிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் இது போல் நடக்கும் அருவருத்தக்க செயலுக்கு என்ன சொல்ல போகிறார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.