பணி நிரந்தரம் கோரிய ஆசிரியர்கள் மீது அராஜகம் கட்டவிழ்ப்பது எந்த வகையில் நியாயம்?- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன் வானதி சீனிவாசன்

சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராட முயன்ற பகுதிநேர ஆசிரியர்களை திமுக அரசு கைது செய்து, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அடக்குமுறை கையாண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வானதி

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையில் பணி நிரந்தரம் கோரி போராட முயன்ற பகுதிநேர ஆசிரியர்களை திமுக அரசு கைது செய்து, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அடக்குமுறை கையாண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் முதல் பாமர மக்கள் வரை அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலை உள்ளது. பணி நிரந்தரம் கோரிய ஆசிரியர்கள் மீது அராஜகம் கட்டவிழ்ப்பது எந்த வகையில் நியாயம்? முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததையும், தேர்தல் வாக்குறுதி எண் 181-ல் பணி நிரந்தரம் வழங்குவதாக உறுதியளித்ததையும் மறந்துவிட்டாரா? இது திராவிட மாடலின் உண்மை முகமா? திமுக அரசின்  ஆணவமும், அரசு ஊழியர்களை அவமதிக்கும் போக்கும் திமுக-வின் அழிவுக்கு வழிவகுக்கும். 2026 தேர்தலில் தமிழக ஆசிரியர்கள் திமுக-வுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.